selvaraghavan as lead actor mohan g next movie

Advertisment

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி கடந்த ஆண்டு ரிஷி ரிச்சர்ட் நடிப்பில் வெளியான 'திரௌபதி' படத்தின் மூலம் பிரபலமானார். இப்படம் வெளியான போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பினாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைதொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி ரிஷி ரிச்சர்டு, தர்ஷா குப்தா, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கியிருந்தார். ஒரு சாரார் மத்தியில் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தாலும் சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d7cf6c96-a0ab-4680-a96f-cf03f374a0ac" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Bachelor-article-inside-ad_56.jpg" />

இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி இயக்கும் அடுத்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பைபடத்தின் இயக்குநர் மோகன் ஜி தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.

Advertisment